சென்னைவாழ் திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை தர்மபண்டு 14-09-1956 அன்று உதயமானது. 1956-ல் 52 உறுப்பினர்களுடன் துவகப்பட்ட இந்த உறவின்முறை தற்பொழுது 600 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வடசென்னையில் 1983 ஆம் ஆண்டு சுமார் 7200 சதுர அடி பரப்பளவில் திருத்தங்கல் நாடார் அரங்கம் என்ற பெயரில் பிரமாண்டமான திருமண மண்டபம் கட்டப்பட்டு குறைந்த வாடகையில் நிறைந்த வசதிகளுடன் இயங்கி கொண்டிருக்கிறது.
1997 - ஆம் ஆண்டு சென்னையில் நாடார் உறவின்முறைகளில் முதன் முதலாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியான திருத்தங்கல் நாடார் கல்லூரி சீரிய முறையில் 9.3 ஏக்கர் பரப்பளவில் நிறுவி தற்போது சுமார் 2500 மாணவ மாணவியர்களுடனும் ஆற்றல் நிறைந்த 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு முதல் சென்னயில் நாடார் உறவின்முறைகளில் முதன் முதலாக CBSE பாடத்திட்டத்தின் கீழ் முதல் பள்ளியாக திருத்தங்கல் நாடார் வித்யாலயா மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. தற்போது சுமார் 1400 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். திறமை மிக்க 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு பட்டம் பெறுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கி கொண்டு வருகிறோம்.